மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்தாலஜி படங்கள்

சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை, பாவக் கதைகள் போன்ற ஆந்தாலஜி படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து ‘குட்டி ஸ்டோரி’ என்ற தலைப்பில் ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘அருவி’ பட புகழ் அதிதி பாலன் நடித்துள்ளார். ‘குட்டி ஸ்டோரி’ படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 12-ந் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here