தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் ரூ.480 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் சரிவு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைதொடர்ந்து ஏற்ற இறக்கமாக காணப்பட்ட தங்கம் விலை, கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் ரூ.36,944க்கும், 29ம் தேதி ரூ.37,104க்கும், ரூ.37,240க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.296 அதிகரித்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹேப்பி நியூஸ்

இந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. 2வது நாளாக இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.4,595க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.36,760க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு ரூ.2.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76.800க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here