நடிப்பு மட்டுமின்றி இயற்கை விவசாயத்தில் கலக்கும் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார்

மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மோகன்லால். சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது உடற்பயிற்சி, படப்பிடிப்பு பணிகள், வாழ்த்துப் பதிவுகள், விழிப்புணர்வு தகவல்கள் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார்.

விவசாயம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் சில மாதங்கள் சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த மோகன்லால், இரு மாதங்களுக்கு முன் சொந்த மாநிலமான கேரளாவுக்குச் சென்றார். கொச்சியில் அவரது வீட்டை ஒட்டியுள்ள நிலத்தில் விவசாயம் செய்தார். இதன் பலனாக, தற்போது வாழை மற்றும் காய்கறிகள் விளைந்துள்ளதை மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; காலையிலும், மாலையிலும் பலமணி நேரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது, மண்வெட்டியால் குழி தோண்டுவது எனத் தீவிர விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தனக்கு நடிக்க மட்டுமல்ல, விவசாயமும் நன்றாகவே தெரியும். இன்றிலிருந்து திரிஷ்யம் 2 படக்குழுவினரிடன் படப்பிடிப்பில் இணைத்துள்ளேன். இவ்வாறு மோகன்லால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here