வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரபல நடிகை இனியா தற்போது சின்னத்திரையிலும் கால் பதிக்கப் போகிறார்.

வெள்ளித்திரை நாயகி

‘பாடகசாலை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இனியா. அதன்பிறகு யுத்தம் செய், வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண்பேசும் வார்த்தைகள், புலிவால், நான் சிகப்பு மனிதன் போன்ற பல படங்களில் நடித்தார். இருப்பினும் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க இன்றும் போராடிக் கொண்டே இருக்கிறார். வெள்ளிதிரையில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைத்த இனியா, தற்போது சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளார்.

வில்லியாக மிரட்டல்!

இனியாவிற்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகப் போகும் ஒரு சீரியலுக்கு இனியாவை அணுகியுள்ளனர். ஹீரோயினாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பது தான் தனக்கு பிடிக்கும் எனக்கூறி, வில்லி கதாபாத்திரத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இவர் நடிக்கப் போகும் ‘கண்ணான கண்ணே’ என்ற சீரியலிலில், ஹீரோவாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் நந்தினி என்ற சீரியல் மூலம் அனைவருக்கும் பரிட்சயமானவர். தொலைக்காட்சி நிறுவனத்தில் முன்னணியான சன் டிவி, பல சீரியல்களை ஹிட் கொடுத்துள்ளது. ஆனாலும் சில சீரியல்கள் தோல்வியும் அடைந்துள்ளது. இனியா வில்லியாக நடிக்கப் போகும் இந்த சீரியல், வெற்றி பெருமா? இல்லையா? எண்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here