பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள சம்பவம் பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.

பாலியல் புகார்

தேவ் டி, கேங்ஸ் ஆப் வசிப்பூர், பாம்பே டாக்கீஸ், பாம்பே வெல்வெட் போன்ற படங்களை இயக்கியவர் அனுராஷக் காஷ்யப். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான இவர், தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் மீது இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை கூறி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பிரதமருக்கு கோரிக்கை

இதுகுறித்து பாயல் கோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “அனுராக் காஷ்யப் என்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார். பிரதமர் மோடி அவர்களே, இந்த புத்திசாலி மனிதருக்கு பின்னால் இருக்கும் தீய சக்தியை நாட்டு மக்கள் பார்க்கும் வகையில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கும், என் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நான் அறிவேன். தயவு செய்து உதவுங்கள்.” இவ்வாறு பதிவிட்டுள்ள பாயல் கோஷ், பிரதமரை ‘டேக்’ செய்துள்ளார்.

திட்டவட்ட மறுப்பு

ஆனால், இந்த குற்ற்ச்சாட்டை இயக்குநர் அனுராஷக் காஷ்யப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது; என் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதரமற்றவை. என் வாயை அடைப்பதற்கு எடுத்த நீண்டகால முயற்சி இது. என்னை அமைதியாக்கும் முயற்சியில், நீங்கள் இன்னும் சில பெண்களையும், சில பாலிவுட் குடும்பத்தினரையும் இந்த பிரச்சினைக்குள் இழுத்துள்ளீர்கள். வரம்புடன் நடந்து கொள்ளுங்கள்.” எனக் கூறியுள்ளார். பாயல் கோஷின் இந்த குற்றச்சாட்டு, பாலிவுட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி புயலை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரம், கங்கனா விவகாரம், போதைப் பொருள், கைது நடவடிக்கை என பரபரப்பில் இருக்கும் பாலிவுட், இந்த விவகாரத்தால் மேலும் பரபரப்பாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here