லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘எவனென்று நினைத்தாய்’ படத்தில் விஜய் சேதுபதியும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கமலுடன் விஜய் சேதுபதி?

சமீபத்தில் ‘ஆண்டவருக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டு ‘எவனென்று நினைத்தாய்’ பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனின் 232வது படமான இப்படத்தை, அவரது சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ‘இந்தியன் 2’ படத்திற்கு முன்பே, இப்படம் வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எவனென்று நினைத்தாய்’ படத்தை பற்றிய பல செய்திகள் இணைய தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கமலுடன் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் பரவியது. ஆனால் அந்த செய்தியை படக்குழு மறுத்துள்ளது.

காப்பியா இருக்குமோ!

‘எவனென்று நினைத்தாய்’ படத்தின் போஸ்டர் முழுவதும் துப்பாக்கியால் நிறைந்து இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ், ஹாலிவுட் படமான ‘மெக்கானிக்’ படத்தின் காப்பியா? என கேள்வி எழுப்பி உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி திரைக்கு வர தயாராக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி இணைந்து நடித்து இருப்பதால், ‘எவனென்று நினைத்தாய்’ படத்திலும் விஜய் சேதுபதி கமலுடன் கூட்டணி சேருகிறார் என்ற செய்திகள் வெளிவந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here