பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

 

வெற்றி நாயகி

பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, அப்படம் கொடுத்த அறிமுகம் பல மொழிகளில் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. மேலும் இந்த படம் மலையாளத்தில் வெளியான நிலையில், மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனது அடுத்தடுத்த படங்களை மிக முக்கியமான கதைகளுடன் சிறந்த கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய்பல்லவி, மற்ற நடிகைகளை விட கதைகள் தேர்ந்தெடுப்பதில் சற்று வித்தியாசமாக காணப்படுகிறார். தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., தனுஷூடன் மாரி 2 படங்களில் அவர் நடித்துள்ளார். தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்து வரும் ‘விராட்ட பர்வம்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் நானியுடன் இரண்டாம் முறையாக மீண்டும் இணைகிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ என்ற படத்தில் நானியுடன் முதன்முதலாக நடித்திருந்தார் சாய் பல்லவி. ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படமாக வெளிவந்த ‘மிடில் கிளாஸ் அப்பாயி’, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, சுமார் 100 கோடியை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டானது.

ரூ.2 கோடி சம்பளம்?

இந்த நிலையில், நானி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க சாய்பல்லவியை படக்குழு அணுகி உள்ளது. அதில் நடிக்க சாய்பல்லவி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த தொகையில் இருந்து கொஞ்சம் குறைக்கும்படி படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ராகுல் சங்ரித்யன் இயக்கும் இப்படம், கொல்கத்தாவில் சம்பவங்கள் நடப்பது போன்று திரைக்கதை அமைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here