‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’ என்ற காமெடி நிகழ்ச்சியில் நடந்த கடுமையான போட்டியில் போட்டியாளர் அபிஷேக் குமார் முதல் பரிசை தட்டி சென்றுள்ளார்.

தனி மதிப்பு உண்டு

ஸ்டான்ட் அப் காமெடி என்பது மிகப் பாரம்பரியமான, பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த வகை நகைச்சுவை, OTT தளத்தில் “காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா” என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. உள்ளூர் பாணியை மேடையேற்றியிருக்கும் இந்த நிகழ்ச்சி, ஸ்டான்ட் அப் காமெடி உலகில் ஒரு புதிய அடியை எடுத்து வைத்துள்ளது. இதுபற்றி பேசிய நிகழ்ச்சியின் நடுவர் கார்த்திக் குமார், மிகப் பாரம்பரியமான, பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்றான ஸ்டான்ட் அப் காமெடி என்பது வெகு சிலருக்குத் தான் தெரியும் என்றார். இன்றைய கால கட்டத்தில் இந்தவகை பொழுதுபோக்கை செய்து வருவதில் நகைச்சுவையாளர்களாகிய நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றும் தங்களின் திறமைகளை பாராட்ட இந்த நிகழ்ச்சி உதவும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரத்யேக நிகழ்ச்சி

காமிக்ஸ்தான் என்ற இந்த புதிய நிகழ்ச்சியில், பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம் ஆகிய 3 முன்னணி நகைச்சுவையாளர்கள், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர்கள், தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி மேடைகளின் ராஜாவாகவோ அல்லது ராணியாகவோ தேர்வாகப் போட்டியிட்டனர். ‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’ நிகழ்ச்சி, தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவமான நுணுக்கங்களை இரவல் பெற்று, உள்ளூர் ரசனையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Only much louder தயாரிக்கும் காமிக்ஸ்தான் தமிழை, அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஜெய் ஆதித்யா, மெர்வின் ரொஸாரியோ ஆகியோர் எழுதியுள்ளனர். கடந்த 11ம் தேதி முதல் காமிக்ஸ்தான் தமிழின் அனைத்து பகுதிகளும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியது. காமெடியில் நடந்த கடும் போட்டியில், போட்டியாளர் அபிஷேக் குமார் முதல் பரிசை தட்டி சென்றார்.

காமெடியை சமைப்பது எப்படி!

அபிஷ் மாத்யூவும், வித்யுலேகா ராமனும் ‘ஸ்டான்ட் அப் காமெடியை சமைப்பது எப்படி’ என்பதற்கான சமையல் குறிப்பைப் பகிர்ந்தனர். ஒரு செஃப்பைப் போல கச்சிதமாக தோற்றமளிக்கும் வித்யுலேகாவுடன், அபிஷ் மேத்யூ இணையம் மூலம் கலந்து பேசி, சரியான விகிதத்தில், உரிய பொருட்களை சேர்ப்பது எப்படி என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது. ‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’ ஷோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here