கஞ்சாவை துளசியுடன் ஒப்பிட்டு பேசிய நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள்

திரையுலகில் போதைப் பொருட்கள் தாராளமாக புழங்குவதாக பரபரப்பான குற்றச்சாட்டுக்குகள் எழுந்த வண்ணம் உள்ளன. தடை செய்யப்பட்ட MDMA போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக பிரபல கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில், பாலிவுட்டையும் போதைப் பொருள் விவகாரம் உலுக்கி வருகிறது. நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார்.

புண்படுத்தும் நோக்கமல்ல

இந்த நிலையில் கன்னட நடிகை நிவேதிதா, கஞ்சாவுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். துளசியைப் போல் கஞ்சா மருத்துவ குணம் கொண்டது என்றும் இதனை தடை செய்வதற்கு முன்பு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்ததாகவும் கூறியிருந்தார். இதை தடை செய்ததற்கு பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தையடுத்து, நடிகை நிவேதிதா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், கஞ்சா குறித்து தான் சொன்ன கருத்து முழுமையாக வெளிவரவில்லை என்றும் ஒருபகுதி மட்டுமே திட்டமிட்டு தவறான நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கஞ்சா மருத்துவ குணங்கள் கொண்டது என்பது தனது சொந்த கருத்தல்ல, ஆன்மீக இலக்கிய ஆவணங்களிலும் மருத்துவ குறிப்புகளில் உள்ளதை தான் மேற்கொள் காட்டினேன் என்றும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக தன்னிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம், உரிய விளக்கத்தை அளித்துவிட்டதாகவும் நிவேதிதா தெரிவித்தார். நடிகை நிவேதிதா தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here