பண மாலையுடன் நடிகை வனிதா விஜயகுமார் பூஜை நடத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரச்சனை மேல் பிரச்சனை

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். பீட்டர் பாலை கரம்பிடித்த நாள் முதல் வனிதா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். ஏற்கனவே திருமணமான பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், வனிதா மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதா திருமணம் செய்துகொண்டதாக கூறினார். இதனால் வனிதா விவகாரத்தில் பெரும் சர்ச்சை உருவாகி, சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பண மாலையுடன் பூஜை

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து பீட்டர் பால் வீடு திரும்பி இருக்கும் நிலையில், வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் வனிதா விஜயகுமார். வனிதா, அவரது இரண்டு மகள்கள், பீட்டர் பால் ஆகியோர் கழுத்தில் பண மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வனிதா பதிவிட்டுள்ளார். தனது வீட்டில் லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும், 2020 ஆம் ஆண்டில் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வனிதாவின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here