கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. ஜூன், ஜூலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4க்கான பணிகளை விஜய் டிவி நிர்வாகம் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நிகழ்ச்சியை பார்க்கும் ஆவலையும் தூண்டியது. அதனைதொடர்ந்து மற்றொரு புரொமோ வீடியோவை வெளியிட்டு விஜய் டிவி நிர்வாகம் அசத்தியது. அதில் நடிகர் கமல்ஹாசன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து அனைவரையும் ஈர்த்தார். இந்த புதிய புரொமோ 48 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது.  யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

ஷாலு ஷம்மு?

ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகை கிரண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் றெக்க, மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாலு ஷம்முவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இன்னும் உறுதியாகவில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் யார் யார் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள் என்ற பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here