மும்பை மாநகராட்சியின் அனுமதியின்றி நடிகை கங்கனா ரணாவத்தின் வீட்டில் கட்டப்பட்டிருந்த பகுதிகளை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

கடும் மோதல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத் மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் சர்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கணா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்றும் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்தார். இதனால் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரணாவத்துக்கும் இடையே டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நடந்தது. மேலும், மகாராஷ்டிர அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் எதிர்ப்புக் கிளம்பியது. நடிகை கங்கனா ரணாவத்துக்கும், மகாராாஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையிலான மோதல் வெடித்தது. ஆளும் சிவசேனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகை கங்கனாவிற்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. இந்தச் சூழலில், நடிகை கங்கனா ரணாவத்துக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி அவர் சார்ந்த இமாச்சலப்பிரதேச அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு Y+ பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.

வீடு இடிப்பு

இந்த நிலையில், மும்பையின் புகா்ப் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்லில், நடிகை கங்கனா ரணாவத்தின் வீடு உள்ளது. இங்கு நேற்று ஆய்வு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டிச் சென்றனர். அதில், வீட்டின் மாடிப்படி அருகே கழிப்பறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்து 24 மணி நேரத்தில் கங்கனா ரணாவத் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த பதிலும் வராததையடுத்து, இன்று காலை கங்கனா வீட்டிற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், அனுமதியின்றி செய்யப்பட்டிருந்த மாற்றங்களை இடித்து அகற்றினர். இதனால் பாந்த்ரா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு நடிகை கங்கனா கடும் தெரிவித்துள்ளார். மேலும், தனது வீட்டை இடித்தது சட்டவிரோதம் எனவும் இதைத் தடை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் அவசர மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here