நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணையை பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

அட்டவணை வெளியீடு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

CSK போட்டி விவரங்கள்

1. செப்டம்பர் 19ம் தேதி – சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை, அபு தாபி (இரவு 7.30 மணி)

2.  செப்டம்பர் 22ம் தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான், ஷார்ஜா (இரவு 7.30 மணி)

3.  செப்டம்பர் 25ம் தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ், துபாய் (இரவு 7.30 மணி)

4. அக்டோபர் 2ம் தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் –  சன்ரைசர்ஸ் ஐதராபாத், துபாய் (இரவு 7.30 மணி)

5. அக்டோபர் 4ம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபாய் (இரவு 7.30 மணி)

6. அக்டோபர் 7ம் தேதி – புதன்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபு தாபி (இரவு 7.30 மணி)

7. அக்டோபர் 10ம் தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய் (இரவு 7.30 மணி)

8. அக்டோபர் 13ம் தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத், துபாய் (இரவு 7.30 மணி)

9. அக்டோபர் 17ம் தேதி – சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ், ஷார்ஜா (இரவு 7.30 மணி)

10. அக்டோபர்  19ம் தேதி – திங்கட்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ், அபு தாபி (இரவு 7.30 மணி)

11. அக்டோபர் 23ம் தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ், ஷார்ஜா (இரவு 7.30 மணி)

12. அக்டோபர் 25ம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய் (மதியம் 3.30 மணி)

13. அக்டோபர் 29ம் தேதி – வியாழக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், துபாய் (இரவு 7.30 மணி)

14. நவம்பர் 1ம் தேதி – ஞாயிற்றுக்கிழம – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப், அபு தாபி (மதியம் 3.30 மணி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here