பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், தனது காதலி ராஹியை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காதல் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் கதாநாயகனார். தற்போது ‘ராஜபீமா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆரவ்வுக்கு, கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ராஹிக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. ஆரவ்வும், ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் நடைபெற்று உள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

இந்த திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சியில், சினேகன், காயத்ரி ரகுமாம், ஆர்த்தி, வையாபுரி, பிந்து மாதவி, ஹரீஷ் கல்யாண், ஷக்தி, காஜல் பசுபதி, சுஜா வருணி, கணேஷ் வெங்கட் ராம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதேபோல்  இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here