பூனம் பஜ்வா, சித்து, ஷிவானி நாராயணன், டிக் டாக் இலக்கியா ஆகிய 4 பேரும் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் செல்லப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது, இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, 4வது சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 4க்கான புரொமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நாள்தோறும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் யார் யாரெல்லாம் செல்லப் போகிறார்கள், அங்கு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், டிக் டாக் புகழ் இலக்கியா உள்ளிட்ட நான்கு பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், இந்தச் செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது.

கவர்ச்சி கன்னி

சின்னத்திரையில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷிவானி நாராயணன். கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் போனால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இவர் சித்துவுடன் பிரச்சனையில் இருப்பதால், பிக் பாஸ் வீட்டிற்குள் சித்துவும் போகப் போகிறார் என்ற செய்தி கேட்ட அனைவரையும், அங்கு என்ன நடக்கும் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தள்ளியுள்ளது. கிளாமர் மூலம் பல ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள ஷிவானி, பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் எப்படி இருப்பார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குடும்ப குத்துவிளக்கு

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லையாக நடித்து வரும் சித்ரா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. யார் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்தால் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்பதை நன்கு தெரிந்து, ஏற்கனவே பிரச்சனையில் இருக்கும் இருவரை ஒரே வீட்டிற்குள் வைக்கின்றனர். சித்ராவின் முழு சுயரூபத்தை அவர் வீட்டிற்கு வந்தால் தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் ரசிகர்களும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

பூனம் பஜ்வா

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்காமல், வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகை பூனம் பஜ்வா. கிளாமராக நடிப்பதில் பெயர் போன இவர், தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வரப்போவதாக கூறப்படுகிறது. பூனம் பஜ்வா இங்காவது தனது திறமையை நிரூபிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

டிக் டாக் இலக்கியா

‘டிக் டாக்’ மூலம் பிரபலமான இலக்கியா மேனன், பிக்பாஸ் வீட்டிற்கு வரப் போகிறார் என்ற செய்தியை கேட்ட அனைவரும், கண்டிப்பாக கவர்ச்சிக்கு குறையே இருக்காது என்றும், பொழுதுபோக்கிற்கு இவரே ஒரு நல்ல ஆள் தான் என்றும் கூறி வருகின்றனர். இப்படி முக்கியமான நான்கு பேரின் பெயர் வெளிவந்திருப்பதால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு எபிசோடையும் அக்குவேறு, ஆணிவேராக பிரித்து அனைத்தையும் மீம்ஸாக போடும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கும், டி.ஆர்.பியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் கண்டிப்பாக இது ஒரு விருந்தாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here