நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ சீசன் 4 தொடக்கம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது, இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்க இருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் பணி ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுகிறது. ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக கால தாமதம் ஏற்பட்டது.

எதிர்பார்ப்பு

இதனிடையே, பிக் பாஸ் சீசன் 4க்கான புரொமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. போட்டியாளர்கள் பட்டியலில் ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகைகள் கிரண், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பாகும் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கட்கிழமை முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here