‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கியாரா அத்வானி

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது. வரலாற்றுக் கதை கொண்ட இத்திரைப்படத்தில் கொடிய ஆபத்தான குணங்கள் கொண்ட பிரதான வில்லனாக நடிக்கிறார் சைப் அலி கான். ‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேரப்போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கீர்த்தி இல்லை என்றும் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை கேட்ட கீர்த்தி ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர்.

ரசிகர்கள் எதிர்ப்பு

நம்ம ஊரு நடிகையெல்லாம் விட்டுவிட்டு, பாலிவுட்டிலிருந்து எல்லாரையும் இறக்குமதி செய்கிறார்கள் என்று ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரபாஸுக்கு வில்லனாக எப்பவுமே ராணா மட்டும் தான் நடிக்க முடியும் என்றும் சைப் அலி கான் எல்லாம் வேண்டாம் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறிக்கொண்டிருக்க, மறுபுறம் கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கின்றனர். ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. இப்படம் அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here