பாவாடை தாவணியில் பார்க்க அப்படியே குட்டி நயன்தாரா போலவே இருக்கும் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் ரீல் மகள்

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் அனிகா. ஏராளமான மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அனிகா, தமிழில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித்தின் செல்ல மகளாக நடித்தார். அதன்பிறகு நயன்தாரா – விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இளம் வயது நயன்தாராவாக குட்டி காதம்பரி கேரக்டரில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ‘மிருதன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாகவும், ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாகவும் நடித்திருந்தார். அடுத்தடுத்து அஜித்துக்கு மகளாக நடித்ததால், அஜித் ரசிகர்களால் அனிகா கொண்டாடப்பட்டு வருகிறார். அஜித் ரசிகர்கள் அவரை அஜித்தின் ரீல் மகள் என்றும் நயன்தாரவின் ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் அறிவுரை

இந்நிலையில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து புரமோட் ஆகி ஹீரோயின் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார் அனிகா. இதற்காக முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். நடிகைகளுக்கான அம்சங்கள் இருப்பதை காட்டும் வகையில், கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் அனிகா. இதைப் பார்த்த ரசிகர்கள், “பாப்பா இப்படியெல்லாம் போட்டோ ஷூட் வேண்டாம்” என அனிகாவிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அடுத்த நயன்தாரா!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாவாடை தாவணியில் அசத்தல் போட்டோ ஷுட் நடத்திய அனிகா, அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் கண்களை நகர்த்தவே விடாதபடி அவ்வளவு அழகாக உள்ளது. பிங்க் மற்றும் சிவப்பு நிற காம்பினேஷனில் உள்ள அந்த புகைப்படத்தில் இளம் பதுமையாக அத்தனை அழகாகவும், க்யூட்டாகவும் உள்ளார் அனிகா. நடுவில் அவர் நிற்க நான்கு பக்கம் மலர்களால் படுக்கையை போன்று குடை பிடித்துள்ளார்கள் கேரள பாரம்பரிய உடை உடுத்தியிருக்கும் ஆண்கள். மலர் தோரணங்கள் மேலே தொங்க, நாற்காலில் உதட்டோரத்தில் புன்னகையுடன் ஒய்யாரமாய் அமர்ந்து, கிறங்க வைத்துள்ளார். அனிகாவின் இந்த புகைப்படங்கள் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது. மேலும் இதனைப் பார்த்த நெட்டிசன்கள், தேவதை, பிரீட்டி, பியூட்டிஃபுல், கண்களை நகர்த்தவே முடியவில்லை, பார்த்துக்கொண்டே இருக்கவேண்டு என தோன்றுகிறது என வாய்க்கு வந்தபடி வர்ணித்துள்ளனர்.
இன்னும் சில நெட்டிசன்கள் நீங்கள் குட்டி நயன்தாரா இல்லை, அடுத்த நயன்தாராவே நீங்கள்தான் என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். அனிகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here