‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் சின்ன மருமகள் ஹேமாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீவா மற்றும் கதிர் இருவரும் முறையே மீனா மற்றும் முல்லை ஆகியோரை திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த ஜோடிகளுக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ‘பாண்டியன் ஸ்டோர்ஸில்’ மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமாவுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் நாடகத்தில் பார்ப்பவர்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஹேமா, தற்போது செல்ல மருமகளாக மாறினாள். தொடக்கத்தில் வில்லி போலவே ஹேமாவின் கதாபாத்திரம் இருந்தாலும், இப்போது குடும்பத்தில் ஒன்றிவிட்டது போல் கதையை காட்டத் தொடங்கிவிட்டனர்.

நிஜத்திலும் கர்ப்பம்

சீரியலில் அவர் கர்ப்பமாக இருப்பதாக காட்டிய நேரத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. சீரியலில் தான் ஹேமா கர்பபமாக இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிஜத்திலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தெரியவந்தது. தற்போது சீரியல் சூட்டிங் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் இருக்கும் பலரும் அவ்வப்போது சில சில வீடியோக்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் ஹேமா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.

வளைகாப்பு நிகழ்ச்சி

இந்த நிலையில், ஹேமாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. வீட்டிலேயே எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வரும் சரவண விக்ரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தற்போது அவரது வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துவரும் ஒவ்வொருக்கும் ஒரு சந்தோஷமான தருணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றது. சித்ராவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது ஹேமாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here