நடிகை ஸ்ருதிஹாசன் எருமை மாட்டுடன் விளையாடும் புகைப்படம் இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘லாபம்

விஜய் சேதுபதியுடன், ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘லாபம்’. எஸ்.பி. ஜெகநாதன் இயக்கும் இப்படத்தில் ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பி. ஆறுமுககுமார், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறர். இதற்குமுன் விஜய் சேதுபதி நடித்த ரம்மி, றெக்க, கருப்பன் போன்ற படங்களுக்கு இமான் இசையமைத்து இருக்கிறார்.

மாட்டை தடவிய ஸ்ருதி

ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்த ஸ்ருதிஹாசன், இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் புதுப்புது இசை ஆல்பங்களை வெளியிட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ‘எட்ஜ்’ என்ற இசை ஆல்பம், அனைவராலும் மிகவும் கவரப்பட்டது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், ஸ்ருதிஹாசன் ‘லாபம்’ திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் எருமை மாட்டை தடவி விளையாடி கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த எருமை மாட்டிற்கு ‘ரூபர்ட்’ என்றும் அவர் பெயர் வைத்துள்ளார். இது பாயா? அல்லது கேர்ளா? என கேட்கும் ஸ்ருதிஹாசன் அனைவரையும் கவர்கிறார். ‘லாபம்’ திரைப்படத்தில் சமூக ஆர்வலராக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு, உதவி செய்யும் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. விஜய் சேதுபதியின் மிரட்டலான லுக் அனைவரையும் பெரிய எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. லாக்டவுன் பிரச்சனைகளுக்கு பிறகு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here