மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாக ஒரு தகவல் வெளியான நிலையில், அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க போவதாக கூறப்படுகிறது.

மக்கள் செல்வன்’

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. யதார்த்தமான பேச்சு, அழகான சிரிப்பு, சகஜமாக பழகும் தன்மை, பக்கத்து வீட்டுக்காரர் போலிருக்கும் எளிமையான முகம் உள்ளிட்டவை அவரை மென்மேலும் உயர்த்திக்கொண்டே செல்கிறது. விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டினார் விஜய் சேதுபதி. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒரு பக்கம் என ‘மாஸ்டர்’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தொடர்பாக பல கேள்விகள் எழும் நிலையில், இணையத்தளத்தில் வெளியிட உள்ளதாக சில தகவல்களும் வெளிவந்து கொண்டிருந்தது.

தெலுங்கில் விஜய் சேதுபதி?

மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதற்காக முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகின்றது. ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணும், விஜய் சேதுபதியும் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல மொழிகளில் நடிக்கத் துவங்கிய விஜய் சேதுபதிக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் விஜய் சேதுபதி, அப்படத்திற்கு சரியான தேர்வு என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. எனினும் இதுதொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ளதாகவும், அப்படத்தில் அவரே நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here