பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரினா தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மிரட்டும் வில்லி

‘ஒரு நிமிடம் ப்ளீஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஃபரினா, சன் டிவியில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ என்ற ஷோவினால் பிரபலம் அடைந்தார். பிறகு சன் டிவியில் ‘அழகு’ என்ற சீரியலில் நடித்து வந்த ஃபரினா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அஞ்சறைப்பெட்டி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தனது துருதுரு பேச்சால் சின்னத்திரையில் மறக்கமுடியாத நடிகையாகவே வலம் வந்து கொண்டிருந்த ஃபரினா, தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். புசு புசு தேகம், கண்ணைக் கவரும் அழகு, அளவான கவர்ச்சியுடன் அனைவரையும் ஈர்த்து வந்த வெண்பா, சமீபகாலமாகவே தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த சீரியலில் முக்கிய வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் வெண்பா, உடல் எடையை பெருமளவில் குறைத்து, இது அவர் தானா என்று கேட்கும் அளவிற்கு அடையாமல் தெரியாமல் நிற்கிறார். பலப்பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்த் வண்ணம் இருக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், பலவகையான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here