நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ சீசன் 4 ஷூட்டிங்கை விரைவில் தொடங்க சேனல் தரப்பு முடிவு செய்துள்ளது.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்க இருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் பணி ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுகிறது. ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக எந்த ஒரு பணியும் சரிவர நடைபெறாமல் இருந்து வருகிறது.

விரைவில் ஷூட்டிங்

ஜூன், ஜூலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்து வந்ததால் இந்த ஆண்டு நிகழ்ச்சியை நடத்தலாமா? வேண்டாமா? என்கிற யோசனையிலும் இருந்தது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்க விஜய் டிவி நிர்வாகம் தயாராகி வருகிறது. அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களும் இதற்கான முழு வேலைகளையும் முடித்து, ஒளிபரப்பையும் நிகழ்த்தி விட வேண்டும் என சேனல் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கமல்ஹாசன் தரப்பிலும் பச்சைக் கொடி காட்ட, அவரை வைத்து விரைவில் புரொமோ ஷூட் ஒன்றை நடத்தவும் விஜய் டிவி தயாராகியுள்ளது. ஆகவே, வழக்கம் போல இந்த ஆண்டும் ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாகலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here