காமெடி நடிகர் மனோ பாலா இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் செம யூத் கெட்டப்பில் போட்டோ ஷுட்டை நடத்தியுள்ளதை நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.

சிறந்த நடிகர்

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றனர். அந்த வரிசையில் நடிகர் மனோ பாலாவும் ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய மனோ பாலாவை, திரையில் அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான “புதிய வார்ப்புகள்” படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்த மனோபாலா, அந்தப் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். அதன்பின்னர் பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், பின்னர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இவர் முதன்முதலில் கார்த்தி மற்றும் சுகாசினியை வைத்து “ஆகாய கங்கை” என்ற படத்தை இயக்கினார். பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார். இறுதியாக ஜெயராம் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘நைனா’ படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். அதுமட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களையும் இயக்கியிருக்கிறார். இதுவரை 14 திரைப்படங்களையும், 19 சின்னத்திரை தொடர்களையும் மனோ பாலா இயக்கியுள்ளார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர், நடிகைகள் பலர் உடற்பயிற்சி, யோகா, போட்டோ ஷூட் என்று சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களாக அள்ளி வீசி வருகின்றனர். நடிகைகள் தான் போட்டோ ஷூட் நடத்துவார்களா நடிகர்களும் நடித்துவார்கள் என்று படு ஸ்டைலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் மனோ பாலா. “நாங்களும் டஃப் கொடுப்போம்ல” என்ற கேப்ஷனுடன், நாற்காலியில் அமர்ந்து, அப்படியும் இப்படியுமாக வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார் மனோ பாலா. இந்த போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்ஸ், அவரை கிண்டலடித்து வருகின்றனர். “சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் வரும் பில்டப்பே தோற்றுவிடும்”, “கோலிவுட்டுக்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே”, “பாம்புக்கு ஒரு காலம் வந்தால் பல்லிக்கு ஒரு காலம் வரும்” என்று பங்கமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here