சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.

உயர்ந்து வந்த தங்கம் விலை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

விலை சரிவு

இந்த நிலையில் 3வது நாளாக இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது. கிராம் ரூ.229 குறைந்து ரூ.5,013க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 12 ரூபாய் 30 காசுகள் குறைந்து 70 ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here