சாத்தான்குளம் லாக்கப் மரண வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தந்தை, மகன் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி கடை வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி அதிகநேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தந்தை, மகனான இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எஸ்.ஐ. மரணம்

முதலில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் எஸ்.ஐ. பால்துரை உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பால்துரையின் மனைவி மங்கயர்திலகம், தனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்ததையடுத்து, அவருக்கு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி எஸ்.ஐ. பால்துரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி குற்றச்சாட்டு

இதுகுறித்து தகவல் அறிந்த பால்துரையின் மனைவி மங்கையர்திலகம், தனது கணவருக்கும் கொலை வழக்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணமான சாத்தான்குளம் காவல்நிலைய பெண் காவலர் பியூலா, காவலர் சேவியர் மற்றும் தத்தார்மடை காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஸ் ஆகியோர் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here