சமீபத்தில் தனது 29வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஹன்சிகாவின் பெயரை நட்சத்திரத்துக்கு வைத்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

டாப் ஹீரோயின்

தெலுங்கில் வெளியான ‘தேசமுத்ருடு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. பிறகு தனுஷுடன் இணைந்து மாப்பிள்ளை என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படமே ஹிட்டானதால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் படமும், உதயநிதியுடன் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம், போகன் என்ற படமும் இவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. தனது அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ள ஹன்சிகாவை, ரசிகர்கள் குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கின்றனர்.

ரத்த கரையுடன் ஹன்சிகா

‘மஹா’ என்ற படத்தில் தற்போது நடித்து வரும் ஹன்சிகா, தனது பிறந்தநாளன்று ரத்த கரையிலிருக்கும் அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கும் ‘மஹா’ படத்தில் சிம்பு உடன் இணைந்து நடிப்பதால், ஹன்சிகாவின் ரசிகர்கள் இப்படத்திற்காக பெருமளவு எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த், சாயாசிங், தம்பி ராமையா, நாசர் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பிறந்தநாள் அதுவுமா ரத்த கரையோடு இருக்கும் போஸ்டரை ஹன்சிகா வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் அந்த போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றனர்.

மிகப்பெரிய பரிசு

பிறந்தநாள் பரிசாக வேறொரு சூப்பர் பரிசு ஒன்று ஹன்சிகாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, நட்சத்திரம் ஒன்றிற்கு ஹன்சிகாவின் பெயரை வைக்க கூகுள் நிறுவனம் நாசாவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இதைப்பற்றி ஹன்சிகா கூறும்போது; “புகழ்பெற்ற ஒருவரை கூகுள் தொடர்பு கொண்டு இந்த பெருமையை பெற்று தருவது வழக்கம். நான் குழந்தை நட்சத்திரமாக என் கேரியரை ஆரம்பித்து நடித்து வருகிறேன். கூகுள், நட்சத்திரம் ஒன்றிற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக எனது பெயரை நாசாவுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாசா விஞ்ஞானிகளும் இதுபற்றி ஆய்வு செய்து எனது பெயரை ஒரு நட்சத்திரத்துக்கு வைத்துள்ளனர். பிறந்தநாள் பரிசாக இதைவிட வேறு என்ன கிடைக்க முடியும். இவ்வாறு ஹன்சிகா கூறியுள்ளார். மேலும் அதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். ஹன்சிகா மோத்வானியின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், இந்த செய்தியை பலருக்கும் ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here