மீரா மிதுன் விவகாரம் தொடர்பாக நடிகர் விக்ராந்த் போட்டுள்ள டுவீட் பதிவு விஜய், சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சீண்டும் மீரா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன், சமீப காலமாக பல முன்னணி நடிகர், நடிகைகளை கேவலப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். அதிலும் கமல்ஹாசன், திரிஷாவை உயர்ந்த சாதிக்காரர்கள் என்றும் அதனால் தான் அவர்கள் அனைவருக்கும் சப்போர்ட் செய்கிறார்கள் என்றும் கூறினார். தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் உள்ளவர்களே அதிகம் என்றும் நெப்போடிசம், மாஃபியா போன்றவைகள் அனைத்தும் தலைவிரித்து ஆடுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நெப்போடிசம் புரொடக்ட்ஸ் மட்டும்தான் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் எனத் தெரிவித்த அவர், நடிகர் ரஜினி கன்னடர் என்றும் விஜய் கிறிஸ்துவர் என்றும் விமர்சித்தார். நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரது மனைவிகள் குறித்து தகாத வார்த்தைகளால் பேசி வீடியோ பதிவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். தொடர்ந்து நடிகர் விஜய்க்கு எதிராகவும் அவரது ரசிகர்களுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

நடிக்கவே தெரியாத சூர்யா, ஒரு ஷாட் நடிப்பதற்கு 20 டேக் மேல் எடுப்பார் என்றும் கிண்டலடித்தார். மீரா மிதுன் பதிவிட்டு வரும் அனைத்து டுவீட்டுகளும், விஜய், சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய் ரசிகர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மீரா மிதுனுக்கு எதிராக அனைத்து நடிகர், நடிகைகளின் ரசிகர்களும் திரும்பி உள்ளனர். நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் மும்பைக்கு சென்று செட்டில் ஆன மீரா, வேலை இல்லாமல்தான் இதுபோன்ற விளம்பரத்தை தேடுகிறார் என்றும் அவர் எதிர்பார்த்த விளம்பரம் அவருக்கு கிடைத்துவிட்டது என்றும் பலர் கூறி வருகின்றனர்.

போலியான ஆட்கள்

மீரா மிதுன் விவகாரம் தொடர்பாக நடிகர் விக்ராந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “வாழ்க்கை மிகவும் சிறியது. நெகட்டிவிட்டி, கிசுகிசுவை கண்டுகொள்ள வேண்டாம், போலியான ஆட்கள், அவர்களின் ட்ராமா அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் IGNORE NEGATIVITY என்று விஜய் ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here