மீரா மிதுன் வெளியிட்ட சர்ச்சை வீடியோ குறித்து விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் அவரது டுவிட்டர் பக்கத்தில் IGNORE NEGATIVITY என்று பதிவிட்டுள்ளார்.

சர்ச்சை நாயகி

சர்ச்சைக்கு மறுபெயர் என்றால் அது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமான இவர், தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பலரும் விமர்சித்தாலும், அறிவுரை கூறினாலும் அதனை அவர் கேட்பதாக இல்லை. சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்த மீரா மிதுன், கமல்ஹாசனையும் சாடினார். திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும் சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார் என்றும் கூறி கிண்டலடித்தார். மீரா மிதுனின் இந்த செயல், ரஜினி, கமல், விஜய், சூர்யா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவியும் கண்டனம்

மேலும் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரது மனைவிகளைப் பற்றி தரக்குறைவாக பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார் மீரா மிதுன். இதனால் பொருமையிழந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து வருகின்றனர். இல்லத்தரசிகள் சிலரும் மீரா மிதுனின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சக நடிகையான சனம் ஷெட்டியும் கூட மீராவை கண்டித்து வீடியோ வெளியிட்டார். இதனிடையே மீரா மிதுனின் இந்த செயலுக்கு நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், தனது டுவிட்டர் பக்கத்தில் IGNORE NEGATIVITY என்று பதிவிட்டுள்ளார். இந்த டுவீட்டை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here