மைன்ட் வாய்ஸ்னு நெனச்சி வெளிய பேசிட்டேயே மீனா என்று கிண்டல் அடிக்கும் விதமான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் புதிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ரசிகர்களை கவரும் சீரியல்கள்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள் மட்டும்தான் அதைப் பார்ப்பார்கள் என்ற கண்ணோட்டம் மறைந்து, தற்போது இளைஞர்கள் கூட அதனை சீரியல்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். மாமியார் கொடுமை, எப்போதும் அழுகை என்று இருந்து கொண்டிருந்த சீரியல்கள் அனைத்தும் ரொமான்ஸ், லவ், சென்டிமெண்ட், சண்டைக்காட்சி, பாடல் காட்சி என்று பல ரகங்களாக இருப்பதனால் எல்லோரும் சீரியல்களை ரசிக்கத் தொடங்கி உள்ளனர். கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

அந்த வகையில், கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீவா மற்றும் கதிர் இருவரும் முறையே மீனா மற்றும் முல்லை ஆகியோரை திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த ஜோடிகளுக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ‘பாண்டியன் ஸ்டோர்ஸில்’ மீனா கதாபாத்தில் நடிக்கும் ஹேமாவுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் நாடகத்தில் பார்ப்பவர்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஹேமா, தற்போது செல்ல மருமகளாக மாறினாள். தொடக்கத்தில் வில்லி போலவே ஹேமாவின் கதாபாத்திரம் இருந்தாலும், இப்போது குடும்பத்தில் ஒன்றிவிட்டது போல் கதையை காட்டத் தொடங்கிவிட்டனர். மூத்த மருமகளுக்கு குழந்தை இல்லை என்பதனால், சின்ன மருமகளான மீனா கர்ப்பமான செய்தி பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது.

மைன்ட் வாய்ஸ்

மீனா கதாபாத்திரத்தின்படி, தனது அம்மா வீட்டை எப்பொழுதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். என்னதான் அந்தக் குடும்பத்தில் அவர் ஒன்றிப்போய் இருந்தாலும், அவ்வப்போது அவரின் சில்மிஷ புத்திகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றது. மாமியார் வீட்டுக்கு முல்லையுடன் கதிர் சென்றிருக்கிறார். நேரம் ஆகிவிட்டதால் அங்கேயே தங்கிவிட்டார்கள் என்று மூர்த்தி என்கின்ற பெரிய அண்ணன் தன் மனைவியிடம் சொல்ல, உடனே அவர்களைப் பற்றி முணுமுணுக்க தொடங்குகிறார் மீனா. திராட்சை சாப்பிட்டு கொண்டே இருக்கும் மீனா, பழம் புளிக்கிறது என்று சொல்ல, அது உங்கள் அப்பா வாங்கி வந்த பழம் என்று மூத்த மருமகள் சொல்ல, உடனே தன் குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் புளிக்கவில்லை புளிக்கவில்லை என்று சொல்லி அசடுவழிகிறார். மைன்ட் வாய்ஸ்னு நெனச்சி வெளிய பேசிட்டேயே மீனா என்று அவர்கள் கிண்டலடிக்க, அனைவரும் சிரிக்கின்றனர். இந்த விடியோ தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here