நடிகர்கள் விஜய், சூர்யாவை விமர்த்த மீரா மிதுனுக்கு டிக் டாக் புகழ் ஜிபி. முத்து எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வம்பிழுத்த நடிகை

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள மீரா மிதுன், சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்த அவர், கமல்ஹாசனையும் சாடினார். திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்று கூறி கிண்டலடித்தார். ஒரு படி மேலே போய் விஜய், சூர்யா மனைவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மீரா மிதுனின் இந்த செயல், ரஜினி, கமல், விஜய், சூர்யா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசைபாடிய ஜிபி முத்து

இந்த நிலையில், மீரா மிதுனை டிக் டாக் புகழ் ஜிபி. முத்து வெளுத்து வாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது; “விஜய் ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் உன்னை சும்மா விட மாட்டாங்க. விஜய், சூர்யா பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்குது. அவங்கள பத்தி நீ பேசவே கூடாது என்று கூறியுள்ளார். மேலும் தனக்கே உன்டான பாணியில் மீரா மிதுனை ஜிபி முத்து வசைபாடியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here