நடிகர்கள் விஜய், சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏர்படுத்திய மீரா மிதுனை நடிகை சனம் ஷெட்டி சரமாரியாக விளாசித் தள்ளியுள்ளார்.

சர்ச்சை நாயகி 

சர்ச்சைக்கு மறுபெயர் என்றால் அது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு சர்ச்சைக்கு சொந்தமான இவர், தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பலரும் விமர்சித்தாலும், அறிவுரை கூறினாலும் அதனை அவர் கேட்பதாக இல்லை. சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்த மீரா மிதுன், கமல்ஹாசனையும் சாடினார். திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது என்றும் சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார் என்றும் கூறி கிண்டலடித்தார். மீரா மிதுனின் இந்த செயல், ரஜினி, கமல், விஜய், சூர்யா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகாத வார்த்தைகள்

தமிழ் மட்டுமின்றி கங்கனா ரனாவத், கியாரா அத்வானி போன்ற பாலிவுட் நடிகைகளையும் மீரா மிதுன் வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். இந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒருபுறம் இருக்க, திடீரென்று உதயநிதி ஸ்டாலினுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அரசியலுக்கு செல்லப் போகிறேன் எனக்கூறி அதிர வைத்தார். இப்படி பல பிரச்சனைகளில் தானாக வந்து சிக்கிக் கொள்ளும் மீரா மிதுன், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கினார். நடிகர்கள் சூர்யா மனைவி ஜோதிகாவையும், விஜய் மனைவி சங்கீதாவையும் தகாத வார்த்தைகளால் பேசினார் மீரா. இதனைப் பார்த்த விஜய், சூர்யா ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். மீரா மிதுனின் இந்தச் செயல் நீண்டுகொண்டே போனால், அவர்மீது வழக்கு தொடரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சனம் ஷெட்டி பதிலடி

இந்நிலையில் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சனம் ஷெட்டி மிகவும் ஆதங்கத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; இப்படி எல்லாம் பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் மீரா. எதாவது நம்பும்படி பேசுங்கள். நீங்கள் பேசுவதை அவர் கண்டுக்கவே மாட்டார். உங்களுக்கு பதில் சொல்ல நான் மட்டும் போதும். சூர்யா எத்தனை டேக் எடுத்தால் உங்களுக்கு என்ன. ஒரு ஷாட் நல்லா வரனும்னா பலமுறை எடுப்பது வழக்கம் தான். உங்களுக்கு அவர் படத்தில் நடிக்க மிகப்பெரிய வாய்ப்பை அவர் கொடுத்துள்ளார். இதனால் பல ரசிகர்கள் உங்களை இணையத்தளத்தில் பின் தொடர்ந்தார்கள் என்று நீங்களே கூறியுள்ளீர்கள். இதை எல்லாம் மறந்துவிடாதீர்கள். இப்போது நீங்கள் தான் நெகடிவ் விமர்சனத்தை தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்திருக்கும் சனம் ஷெட்டியின் இந்த வீடியோவை, விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here