இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளம் நடிகை மாளவிகா மோகனனுக்கு ‘மாஸ்டர்’ படக்குழு சப்ரைஸ் பரிசு ஒன்றை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆரம்பமே அசத்தல்

அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து பட்டையை கிளப்பி இருந்த நடிகை மாளவிகா மோகனன், சமூக வலைத்தளங்களில் ஹாட் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் இவர், அவ்வப்போது சிலப்பல கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார். தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், முன்னணி நடிகைகளுக்கு இணையாக தன்னை வளர்த்துக் கொண்டார். மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நம்ம ஊர் பக்கம் மட்டுமில்லாமல், பாலிவுட்டிலும் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். தனக்கென ஒரு ரூட்டை பிடித்துக் கொண்டு, பல முன்னணி நடிகைகளுக்கு சவால்விடும் வகையில் நடிப்புத் திறமையை காட்டிக் கொண்டிருக்கும் மாளவிகா மோகனன், சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

பிறந்தநாள் பரிசு

பெருமளவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கும் படம் “மாஸ்டர்”. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ‘மாஸ்டர்’ படத்தின் பலப்பல அப்டேட்கள் வெளிவந்து சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனனுக்கு, ‘மாஸ்டர்’ படக்குழு பிறந்த நாள் பரிசாக ஒரு அழகான போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த விஜய் ரசிகர்களும், மாளவிகா மோகனன் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதனை வைரலாக்கி வருகின்றனர். மாளவிகா மோகனனுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here