நடிகை யாஷிகா ஆனந்த் தனது பிறந்த நாளையொட்டி ஒரே நேரத்தில் 5 கேக்குகளை வெட்டி நண்பர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

கனவு நாயகி

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’, ‘துருவங்கள் பதினாரு’ படங்களில் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு ‘சோம்பி’, ‘நோட்டா’ படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்த யாஷிகா, ‘மணியார் குடும்பம்’, ‘கழுகு 2’ படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். வடிவுக்கரசி, காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடரான ‘ரோஜா’ தொடரில் சில அத்தியாயங்கள் மட்டுமே அவதரிக்கும் சிறப்புத் தோற்றத்தில் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 12 கிலோ வரை யாஷிகா குறைத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று தனது 21வது பிறந்தநாளை நடிகை யாஷிகா ஆனந்த் வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து இரவு 12 மணி அளவில் யாஷிகாவிற்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து திக்குமுக்காட வைத்துள்ளனர். அப்போது 5 விதமான கேக்குகளை வெட்டி, அதனை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்தார். யாஷிகா ஆனந்தின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here