மனிதன் என்ற பெயரில் நடிகர் விஜய் சேதுபதி எடுத்துள்ள போட்டோ ஷூட் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறந்த நடிகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தனது எதார்த்தமான நடிப்பாலும், மனம் கவரும் வகையிலான பேச்சாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மக்கள் செல்வன் எனப் பெயர் சூட்டி அழகு பார்த்தனர். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இதில், மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டிரியா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

வைரலாகும் வீடியோ

ஹீரோ, வில்லன், குணச்சித்திர காதாபத்திரங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்துள்ளார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி சொல்லி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். தற்போது மனிதன் என்ற பெயரில் புதிய போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இதற்கான வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here