சித்தி 2 நெடுந்தொடரில் பொன்வண்ணன் உட்பட சில நடிகர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்

சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நோய்த் தொற்று பரவிக் கொண்டு தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகள் நடத்தப்படாததால், ஏராளமான தொழிலாளர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சில தினங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, கொரோனா அச்சம் காரணமாக நடிகர், நடிகைகள் பலர் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பல நடிகர், நடிகைகளை சீரியல்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சின்னத்திரையில் சாதனை

தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கொடிகட்டிப் பறப்பவர் ராதிகா சரத்குமார். தனது வெள்ளித்திரை வாழ்க்கையை கிழக்கே போகும் ரயில் மூலம் தொடங்கிய அவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரையில் அறிமுகமானார். பெண் மற்றும் சிறகுகள் தொடர்களில் நடித்தார் ராதிகா. இது இரண்டும் பெயர் சொல்லும் அளவிற்கு மக்களிடம் சென்றடயவில்லை. இதனையடுத்து சித்தி என்ற சீரியலில் நடித்தார். மூன்று வருடங்கள் ஒளிபரப்பான இத்தொடர் மூலம் ராதிகா சரத்குமார் சின்னத்திரையில் உச்சம் தொட்டர். இதன்பின் செல்வி, அரசி, செல்லமே, வானி ராணி, சந்திரகுமாரி போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். தற்போது 21 ஆண்டுகள் கழித்து சித்தி பாகம் 2வை ராதிகா தயாரித்து வருகிறார். இதன் படப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாக துவங்கிய சில மாதங்களில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அந்த சீரியல் நிறுத்தப்பட்டு, சித்தி தொடரின் முதல் பாகம் மீண்டும் ஒளிபரப்பபட்டு வருகிறது.

சித்தி 2 தொடரில் மாற்றங்கள்

அரசு சில தளர்வுகளுடன் சின்னத்திரை ஷூட்டிங்கை நடத்த அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து, மீண்டும் சித்தி 2 தொடரின் ஷூட்டிங் துவங்கியதாக ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; சித்தி 2 தொடரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நடிகர் மற்றும் நடிகைகள் வந்து செல்வது கடினம். சிலர் தங்களது சொந்த ஊர்களிலே இருப்பதால் ஷூட்டிங் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. அதனால் வேறு சில நடிகர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறோம். பாதுகாப்பு முக்கியம் என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் சித்தி 2 மீண்டும் ஒளிபரப்பாகும். இவ்வாறு ராதிகா சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார். சித்தி 2வில் நடிகர் பொன்வண்ணன் நடித்து வந்த கதாபாத்திரத்தில் தற்போது நிழல்கள் ரவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here