பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது கணவர் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க அதனை பார்த்து கண்கலங்கி எமோஷனலான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மீனாவாக நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். எம்.சி.ஏ. படித்துள்ள இவர், தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். ‘குல தெய்வம்’, ‘மெல்ல திறந்தது கதவு’, ‘சின்ன தம்பி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள ஹேமா, பாயும் புலி, அட்டக்கத்தி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

கணவர் சர்ப்ரைஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். சீரியலைப் போலவே நிஜத்திலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் ஹேமாவின் பிறந்தநாளையொட்டி அவரது கணவர் சதீஷ் சர்ப்ரைஸ் அளித்துள்ளார். “அழகான சின்ன தேவதை” என்ற பாடலை சதீஷ் பாட, அதனை பார்க்கும் ஹேமா கண் கலங்குகிறார். இது பார்ப்பதற்கு எமோஷனலாக உள்ளது. இந்த வீடியோவை ஹேமா ராஜ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here