தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ‘Work@Home’ திட்டமான ரூ.599 பிளானில் நாள் ஒன்றுக்கு 5 GB data உடன் 90 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் புதிய திட்டத்தை BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதிரடி ஆஃபர்

சில பயனர்களுக்கு டேட்டா STV (Special Tariff Voucher) மிகவும் முக்கியம். சில நேரங்களில், நீங்கள் தேர்வுசெய்த ப்ரீபெய்ட் திட்டம், உங்கள் data தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். மற்ற டெலிகாம் நிறுவனங்களைப் போலவே, BSNL நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா எஸ்.டி.வி.களை வழங்குகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டமும் எஸ்.டி.வி.களை வெவ்வேறு விலையில் ஒரே நன்மைகளுடன் வழங்கக்கூடும். ஆனால் அவைகள் கிட்டத்தட்ட ஒரே விலை புள்ளியில்தான் இருக்கும்.

அசத்தலான ஆஃபர்கள்

BSNL நிறுவனம் ரூ.588 மதிப்புள்ள STV data திட்டமொன்றை வழங்குகிறது. இதற்கு PRBTSTV 548 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வவுச்சர் தினசரி 5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரும். 5 ஜிபி தினசரி தரவை இவ்வளவு சிறிய விலையில் வழங்குவதால், இதன் செல்லுபடியாகும் தன்மை குறைவாக இருக்கலாம் என்று நினைக்கலாம். அது தவறு. இந்த வவுச்சர் மொத்தம் 90 நாட்கள் செல்லுபடியாகும். ஏனென்றால் இந்த வவுச்சருடன் டேட்டாவை தவிர்த்து கூடுதலாக எந்த நன்மையும் கிடையாது.

வரம்பற்ற டேட்டா

ரூ.1098 மதிப்புள்ள டேட்டா வவுச்சர் வரம்பற்ற குரல் அழைப்பு என்கிற கூடுதல் நன்மையுடன் வருகிறது. அதனுடன், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்.களையும் இலவசமாக வழங்குகிறது. Data நன்மையை பொறுத்தவரை, திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முழுவதும் எந்த வேக கட்டுப்பாடுகளும் இல்லாத வரம்பற்ற டேட்டாவை நீங்கள் அனுபவிக்கலாம். கோப்புகளைப் பதிவிறக்குவதற்கும் பதிவேற்றுவதற்கும் உங்களை கட்டுப்படுத்தும் எந்த வழக்கமான FUP வரம்பும் இதில் இருக்காது. இந்த வவுச்சர் 84 நாட்கள் செல்லுபடியாகும்.

வருடாந்திர திட்டம்

இந்த வவுச்சர் ரூ.998க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்றும் இது 2 ஜிபி அளவிலான தினசரி தரவை அதிவேகத்தில் வழங்குகிறது. குறிப்பிட்ட தினசரி டேட்டா FUP வரம்பு தீர்ந்தவுடன் 80 Kbps என்று இணைய வேகம் குறைக்கப்படும். இந்த வவுச்சரைப் பற்றிய மற்றொரு பெரிய விஷயம் என்னவென்றால், இது 270 நாட்கள் செல்லுபடியாகும். லோக்தூமைப் பொறுத்தவரை, வவுச்சரை வாங்கிய முதல் 240 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த வவுச்சருடன் வேறு எந்த கூடுதல் நன்மைகளும் கிடைக்காது. BSNL ரூ.1,999 என்ற வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த பிளான் BSNL வட்டத்தை தவிர மீதமுள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் தரமுடியாத வகையில் அமைந்துள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. யாரும் போர்டல் மாறிவிடாமல் தக்க வைத்துக்கொள்ள இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம் என தொலைத் தொடர்பு வட்டார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here