நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை OTTயில் வெளியிட முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களுக்கு பிடித்த ஒன்று

தற்போது சாதாரண படங்களை விட பயோபிக் என கூறப்படும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் பெருமளவில் மக்களைக் கவர்கிறது. அதனால் பலரும் தற்போது பயோபிக் படங்களையே பெருமளவில் இயக்கி வருகின்றனர். ஒருவரைப் பற்றி முக்கியமான விஷயங்களையும், யதார்த்தங்களையும், அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள். பயோபிக் படங்கள் இப்போது மட்டுமில்லாமல் பல வருடங்களுக்கு முன்பு இருந்தே ஆரம்பிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும். அந்த வகையில் பாரதியார் முதல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வரை பல முக்கியமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுத்து வருகின்றனர்.

OTTயில் ரிலீஸ்?

இப்படி பல்வேறு விதமான வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான அப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. கொரோனாவால் திரையரங்குகள் மூடிப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள் OTTயில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின் போன்ற படங்கள் OTTயில் வெளிவந்தன. அந்த வகையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தையும் OTTயில் வெளியிட முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 1990களில் மலையாள பட உலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷகிலா. மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையே இவரது படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளியது. தமிழில் விஜய், ஜெயம் ரவி, ஆர்யா, அருண் விஜய் ஆகியோர் நடித்த படங்களில் ஷகிலா முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here