நேரம் காலம் பார்க்காமல் சூட்டிங்கில் பங்கேற்கும் நடிகர் சிம்பு நல்ல மனம் படைத்தவர் என இயக்குநர் வெங்கட் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சர்ச்சை நாயகன்

நடிகர் சிம்புவை பற்றி பலரும் பல விதமாக பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். அவரது படங்கள் எது ரிலீஸ் ஆனாலும் அதை வைத்து கலாய்த்து ஒரு வழி செய்துவிடுகின்றனர் ரசிகர்கள். ஆனால் சிம்புவை பற்றி பேசும் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரை புகழ்ந்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற வெங்கட் பிரபு, சிம்புவை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சிறு வயதிலிருந்தே சிம்புவை நன்கு தெரியும் என்றும் அவரும் அவரது குடும்பத்தாரும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் கூறியுள்ளார் .

பெரும் உதவி செய்தார்

சென்னை 28 படத்தில் இடம்பெற்றிருக்கும் “சரோஜா சாமான் நிக்காலோ” என்ற பாடலை படத்தின் கிளைமேக்ஸில் வைக்க சொல்லி பரிந்துரை செய்தது சிம்புதான் என்றும் அப்படத்தில் சிம்புவின் பங்களிப்பு இருந்ததாகவும், படத்தை வருமான ரீதியாக வியாபாரம் செய்வதற்கு அவர் பெருமளவு உதவி செய்ததாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். மாநாடு பட சூட்டிங்கில் சிம்பு பிரச்சனை செய்ததாக பல செய்திகள் வெளிவந்த நிலையில், அனைத்தும் வதந்தி தான் என்றும் சிம்பு தனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாள், கிழமை பார்க்காமல் எப்போது வைத்தாலும் படப்பிடிப்புக்கு சிம்பு வந்துவிடுவார் எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

“மாநாடு” மாற்றத்தை தருமா?

சமீபத்தில் வெளியான ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தின் மூலம் பல சர்ச்சைகளையும், கேலியான பேச்சுக்களையும் சிம்பு சந்தித்தார். படத்தைப் பார்த்த நெட்டிசன்ஸ் பலர் மீம்ஸ் போட்டு, சிம்புவை மட்டுமல்லாமல் கௌதம் மேனனையும் கலாய்த்து வந்தனர். எப்போதும் சர்ச்சைகளையும், கேலியான பேச்சுக்களையும் சந்தித்து வரும் நடிகர் சிம்புவிற்கு “மாநாடு” படம் நிச்சயம் ஒரு மாற்றத்தை தரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here