தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனை விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கொரோனா காதல் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஆப் மூலம் தங்களை குழந்தைகள் போல் சித்தரித்துள்ள அந்த வீடியோவில், ரைம்ஸ் பாடலுக்கு ஏற்ப கியூட்டாக நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here