தற்கொலை செய்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.

மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரும் மனஉளைச்சலில் இருந்த காரணத்தினாலேயே சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது மரணத்திற்கு சில பாலிவுட் நடிகர்கள்தான் காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

நடிப்புத் திறமை

சின்னத்திரையில் இருந்து படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங். இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ். தோனி த அன்ட்டோல்டு ஸ்டோரி‘ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தோனியை கண்முன்ணே நிறுத்தும் அளவிற்கு சுஷாந்தின் நடிப்பு இருந்ததாக பலர் பாராட்டினர். மொத்தம் 11 படங்களில் நடித்திருந்தாலும், தோனி படம் அவருக்கு மிகப்பெறும் திருப்பு முனையாக அமைந்தது.

மரணத்தில் சர்ச்சை

இந்த நிலையில் சுஷாந்த் சிங் வாழ்க்கையை படமாக்கப்போவதாக இயக்குனர் ஷாமிக் மவுலிக் அறிவித்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரன் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுஷாந்த் சிங் வாழ்க்கை படம்

இதுகுறித்து ஷாமிக் மவுலிக் கூறும்போது, “சுஷாந்த் சிங் வாழ்க்கைக்கதை படத்துக்கு கொலையா? தற்கொலையா என்று பெயர் வைத்துள்ளோம். சுஷாந்த் சிங்குக்கு இழைத்த அநீதிகளையும் அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்த படம் இருக்கும்“ என்றார். ஏற்கனவே நிகில் ஆனந்த் என்ற இன்னொரு இயக்குனரும் சுஷாந்த் சிங் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here