ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் தளபதி 65ல் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், வசூல் நாயகனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரைக்கு வர தயாராகவுள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ‘மாஸ்டர்’ படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள் வரத் தொடங்கிவிட்டன.

தளபதி 65

தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என முதலில் பேசப்பட்டது. பின்னர் ஷங்கர் இயக்குவார் என தகவல்கள் வந்தன. ஆனால் அந்த வாய்ப்பை ஏ.ஆர். முருகதாஸ் தட்டிச் சென்றுள்ளார். கத்தி, துப்பாக்கி, சர்காரைத் தொடர்ந்து தளபதி 65யையும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா

‘கிரிக்பார்ட்டி’ என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவை சேர்ந்த அவர், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம், ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

எதிர்பார்ப்பு

விஜய்க்கு ராஷ்மிகா ஜோடியாக நடிப்பது தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய்யின் பிறந்தநாளன்று ‘தளபதி 65’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here