கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் 22ந் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் விஜய் சொன்னதை கேட்காத ரசிகர்கள், சமூக வலைதளங்களில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். #ThalapathyBdayCDP என்னும் ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. இதனிடையே, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் ஆண்ட்ரியா, இந்துஜா, சாந்தனு, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட 20 பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து விஜய் பிறந்தநாளுக்கான காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here