மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அய்யப்பனும் கோஷியும்’

பிரித்விராஜ் – பிஜூமேனன் நடிப்பில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ஒரு செல்வாக்குமிக்க முன்னாள் ராணுவ வீரரான பிருத்விராஜூக்கும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான பிஜூ மேனனுக்கும் நடிக்கும் மோதலே படத்தின் கதை.

தமிழ் ரீமேக்

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கிய 5 ஸ்டார் கதிரேசன், இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார். இப்படத்தில் சசிகுமாரும், ஆர்யாவும் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவின.

சூர்யா, கார்த்தி?

அதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது அந்த படத்தில் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சகோதரர்களான இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது உறுதியானால், சூர்யா – கார்த்தி இணைந்து நடிக்கும் முதல் முழுநீள படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here