‘காட்மேன்’ வெப்சீரிஸ் தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஆபாசம், சர்ச்சை

ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். யோகேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது. அதில் இந்து கடவுள், பிராமண சமூகம் பற்றிய சர்ச்சைக்குரிய வசனங்களும், ஆபாச காட்சிகளும் இருந்தது சர்ச்சையானது.

கடும் கண்டனம்

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்ததுடன், சென்னை, மதுரை போன்ற நகரங்களில் போலீசிலும் புகார் அளித்தனர். ‘காட்மேன்’ தொடரை தடை செய்ய வேண்டும். வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலுத்தன. இதையடுத்து அந்த டீசரை நீக்கினர்.

விசாரணை

இந்த நிலையில், ‘காட்மேன்’ வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், காட்மேன் வெல்சீரிஸ் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராகும்படியும் சம்மனும் அனுப்பி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here