விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் டிரெய்லர் மெய்சிலிர்க்கும் வகையில் இருக்கும் என நடிகையும், அப்படத்தின் கதாநாயகியுமான மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

‘மாஸ்டர்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும்,  விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளனர். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமந் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரிலீஸ்?

கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய ‘மாஸ்டர்’ திரைப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது. வருகிற ஜூன் 22ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிரெய்லர்

‘மாஸ்டர்’ படத்தின் டிரெய்லர் மரண மாசாக இருப்பதாக அப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது; சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழாவின் போதுதான் நான் முதன் முதலில் மாஸ்டர் டிரெய்லர் பார்த்தேன். இது நிச்சயம் ஒரு பித்துநிலைதான். உங்களுக்கும் மெய்சிலிர்க்கும் படியாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here