சூர்யாவும், கே.வி. ஆனந்தும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது ‘அயன்’ 2 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வெற்றிக் கூட்டணி

கே.வி. ஆனந்த் இயக்கிய ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ ஆகிய படங்களில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மூன்று முறை வெற்றிக் கூட்டணி அமைத்த சூர்யாவும் – கே.வி. ஆனந்தும் தற்போது நான்காவது முறையாக கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அயன்’ 2?

அது அயன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னரே இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் படங்கள்

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனைதொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘அருவா’ வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ போன்ற படங்களில் நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here