வடக்கில் இருந்து வந்திருந்தாலும் தெளிவாக தமிழ் பேசும் ஜோதிகாவின் முயற்சியை பாராட்டுவதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

‘பொன்மகள் வந்தாள்’

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கி உள்ள இந்தப் படத்தில், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.

ஓடிடியில் ‘பொன்மகள் வந்தாள்’

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கொரோனா ஊரடங்கு என்பதால் வீடியோ கால் மூலமாக நடிகை ஜோதிகா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது முழுக்க முழுக்க அவர் தமிழில் பேசினார்.

ராதிகா பாராட்டு

ஜோதிகாவின் பேட்டி குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்பிக்கையுடன், தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை. அவருக்குப் பாராட்டுகள்” என ராதிகா சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

கடும் எதிர்ப்பு

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதனிடையே, ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here