தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் நடிகை ரித்திகா சிங்கிற்கு ரசிகர்கள் செல்லப்பெயர் சூட்டி உள்ளனர்.

திரையுலகில் பிரபலம்

‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்த ரித்திகா சிங், நிஜ வாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீராங்கனை என்பது அனைவரும்அறிந்ததே. ஒரே படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான அவருக்கு, அந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் கிடைத்தது.

தெலுங்கில் பிசி

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் நடிக்கிறார். தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், ரித்திகா அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

செல்லப் பெயர்

தமிழில் இவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நிறைய ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அந்த படத்தில் வந்த ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற பெயர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. இதனால் ரசிகர்கள் ரித்திகா சிங்கை “நூடுல்ஸ் மண்ட” என்றே செல்லமாக அழைக்கிறார்கள். ரசிகர்களின் அன்பை பார்த்து ரித்திகாசிங் நெகிழ்ந்து போனாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here